வைபவ் ‘சிக்ஸர்’ படத்திற்கு கவுண்டமணி நோட்டிஸ்.! நாளை படம் வெளியாகுமா.?

0
sixer movie
sixer movie

அறிமுக இயக்குநர் சாக்‌ஷி இயக்கத்தில், வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் ‘சிக்ஸர்’. நாளை திரைக்கு வரும் இந்த படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப் படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் ‘சிக்ஸர்’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

sixer
sixer
sixer
sixer
sixer
sixer