வடிவேலுக்கு மனைவியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்தவர் யார் தெரியுமா.? அட, இந்த பிரபலமா..

maamannan
maamannan

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மாமன்னன் இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நிலையில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் இவர்களை தொடர்ந்து வைகைப்புயல் வடிவேலு, பகத் பாஸில், லால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியினை பெற்று இருக்கிறது.

இந்த படம் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கு சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன். இந்த படத்தில் மாமன்னன் ஆகிய வடிவேலுவிற்கு மனைவியாக வீராயி என்ற கேரக்டரில் நடித்தவர்தான் கீதா கைலாசம்.

இவர் உலகநாயகன் கமலஹாசனின் குருவான கே.பாலச்சந்திரன் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீதா கைலாசம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற சார்ப்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் வீட்ல விசேஷம் படத்திலும் நர்சாக நடித்திருந்த நிலையில் தொடர்ந்து கீதா கைலாசம் சின்ன சின்ன கேரக்டர்களின் நடித்து வருகிறார்.

அப்படி மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருந்த நிலையில் இவருடைய கேரக்டர் பலருடைய கவனத்தை ஈர்த்தது. சமீப பேட்டியில் கலந்துக் கொண்ட கீதா கைலாசம் மாமன்னன் படத்தில் நான் வடிவேலு அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதை கேட்ட பொழுது எனக்கு பயமாக இருந்தது அவருடன் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது நான் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை ஆனால் மாமன்னன் படத்தில் என்னுடைய நடிப்பு திறமையை பலரும் பாராட்டிவுள்ளார்கள்.

அதுவும் நான் இறுதிக் காட்சிகளின் பொழுது ரவுடிகளுக்கு பயந்து கட்டிடக்கடிலையே சென்று மறைந்து கொள்வதெல்லாம் அருமையாக இருந்ததாக பலர் பாராட்டினார்கள் எனக் கூறியுள்ளார் கீதா. மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தின் மூலம் எனக்கு திரையுலகில் நல்ல அடையாளம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.