வடிவேலு என் கிட்ட கூட நெருங்க மாட்டாரு இனி.! அப்பொழுதே கணித்த கமல்..

kamal haasan
kamal haasan

Kamal – Vadivelu: நடிகர் கமலஹாசன் தேவர் மகன் படத்திற்கு பிறகு வடிவேலுக்கு நான் தேவைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். வைகைபுயல் வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி தற்பொழுது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 15ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதாவது, தேவர்மகன் படத்திற்கு பிறகு வடிவேலுக்கு நான் தேவைப்பட மாட்டேன் என கமல் கூறி இருக்கும் நிலையில் இது குறித்து வடிவேலு பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் வடிவேலு தொடர்ந்து ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இந்த சமயத்தில்தான் தேவர்மகன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி இந்த படத்தில் வடிவேலுவின் இசக்கி கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

இவ்வாறு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்த காலகட்டத்தில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஃபீல்ட் அவுட், ரெட் கார்ட் என சில வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்து வந்தார். பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் படும் தோல்வியினை அடைந்தது .

இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி, பகத் பாஸில் ஆகியவர்களுடன் இணைந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய அனைவரையும் கவர்ந்தார் வடிவேலு. இவ்வாறு சமீப பேட்டிகள் வடிவேலு கமல் சாரை சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் அவர் ஒரு தீர்க்கதரசி. அவருக்கு சாமி பிடிக்குதோ இல்லையோ சாமிக்கு அவர ரொம்ப பிடிக்கும் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும், தேவர்மகன் படத்தில் வடிவேலுவை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த கமல் அவருடைய நடிப்பையும் பாராட்டி இருக்கிறார். இனி வடிவேலுக்கு நான் தேவைப்பட மாட்டேன், அவரும் என்னை தேடி வர மாட்டார், வடிவேல் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பார் என அனைவர் முன்னிலையிலும் பாராட்டி உள்ளார் கமல். எனவே இதற்கு வடிவேலு கமல் சாரின் வாக்கு தான் பளித்துவிட்டது என்று பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.