பல தடவை தற்கொலைக்கு முயற்சி செய்த மாரி செல்வராஜ்.? கடைசியாக காப்பாற்றிய வடிவேலு

mari selvaraj : இயக்குனர் மாரி செல்வராஜ் சிறந்த படைப்பாளி என தனது ஒவ்வொரு படம் எடுக்கும் பொழுதும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். முதலில் பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணி அமைத்து கர்ணன் என்னும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார்

தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் உடன் கூட்டணி அமைத்து மாமன்னன் படத்தை எடுத்திருந்தார் படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகி தற்பொழுது வெற்றி நடை கண்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க  சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்கள் நிறைந்த படமாக அமைந்திருந்தது. மேலும் படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி..

மற்றும் பலர் கொடுக்கப்பட்ட தனது கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர். அதன் காரணமாக மக்களுக்கு  படம் ரொம்ப பிடித்து போய் உள்ளதால்  தொடர்ந்து  படம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருவதால் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை மட்டுமே மாமன்னன் திரைப்படம் 52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் வசூல் அள்ளும் என கூறப்படுகிறது. திருநெல்வேலியில் மாமன்னன் பட குழு வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாடியது இதில் பலர் பேசியனர் அவர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

நான் பலமுறை தற்கொலைக்கு முயற்சிதேன் என கூறினார் அப்படி ஒரு தடவை தற்கொலைக்கு முயற்சிக்கும் போது கடிதம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வடிவேலுவின் காமெடி என்னை சிரிக்க வைத்தது அதன் பிறகு தற்கொலை செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டு விட்டேன் என கூறினார். இதனை  வெற்றி விழாவில் உருக்கமாக மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment