உதயநிதி ஸ்டாலின் திரை படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க போகும் வடிவேலு..! அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் ராம் இவருக்கு உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிய செல்வராஜ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அவர்கள் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் பல்வேறு விருதுகளையும் வாங்கி கௌரவித்தது மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் அவர்கள் தான் இயக்க உள்ளார்.அந்த வகையில் பா ரஞ்சித் அவர்கள் தான் தன்னுடைய புரொடக்சன் தயாரிப்பு மூலமாக இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஒரு கபடி வீரராக நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து மற்றொரு திரைப்படத்தையும் இயக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது மட்டுமில்லாமல் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களும் இந்த திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இவ்வாறு வடிவேலு வரவேற்ப்பை எண்ணியும் உதயநிதி ஸ்டாலின் மறுபடியும் ஹீரோவாக நடிக்க உள்ளதை நினைத்து ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment