மீண்டும் தனது சித்து வேலையை காட்டிய வடிவேலு – “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படக்குழுவுக்கு 2 கோடி நஷ்டம்..!

வைகைப்புயல் வடிவேலு நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பதால் தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு குவிக்கின்றன. அதில் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் டிவி சிவானி நாராயணனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்த மூன்று திரைப்படங்களும் வெற்றி பெறும் பட்சத்தில் வடிவேலுவின் மார்க்கெட் இன்னும் அசுர வளர்ச்சியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ரசிகர்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்து வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் நடித்ததற்காக வடிவேலுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் எனக்கு ஒரு பாடல் வேண்டும் என வடிவேலு பிடிவாதம் பிடித்துள்ளார் ஆனால் பட குழு எவ்வளவு சொல்லியும் வடிவேலு கேட்காமல் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் இதற்கு ஒத்துக்கொண்டாராம்..

ஒரு வழியாக பாடல் உருவானதாம் இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது மேலும் மும்பை மாடல் அழகியை வர வைத்தனராம் இதனால் அந்த பாடலை எடுக்க மட்டுமே படகுழுவிற்கு கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் செம கோபத்தில் இருக்கிறாராம்.

Leave a Comment