ஷங்கரிடம் நான் படத்தில் நடிக்கிறேன் என்னை வைத்து படம் எடுங்கள் என பச்சைக்கொடி காட்டிய வடிவேலு.! மீண்டும் தொடங்கப் போகும் 24 ஆம் புலிகேசியின் அலப்பறை.

0

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று வந்த காமெடி நடிகர் என்றால் அது வடிவேலுதான் வடிவேலு நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் பின்பு கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாக வெற்றியை தந்ததால் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.

இவர் கதாநாயகனாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துவிட்டது காமெடி நடிகராக இருந்த வடிவேலு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்ததால் மக்களும் இவரைப் பாராட்டி வந்தார்கள்.

இவர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் மன்னன் கெட்டப் போட்டு அசத்தலாக நடித்திருப்பார் இவர் நடித்த இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கூட்டணி அமைத்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

24ம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இயக்குனர் சிம்பு தேவனிடம் வடிவேலு பல காட்சிகளை மாற்ற சொன்னாராம் இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் ஷங்கரிடம் கூறியபொழுது வடிவேலுவிடம் ஷங்கர் பேசி பார்த்துள்ளார் ஆனால் இருவருக்கும் வாக்குவாதம் பெருக கொடுத்த அட்வான்ஸ் கூட திருப்பி கொடுக்காமல் வடிவேலு படத்தை பாதியிலேயே விட்டு சென்று விட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த ஷங்கர் தயாரிப்பு சங்கத்திடம் கூறி வடிவேலுக்கு ரெட் கார்டு வாங்கி தந்து விட்டார் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வரும் வடிவேலு தனது நிலைமையை யோசித்துப் பார்த்து தற்பொழுது மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி  திரைப்படத்தில் நடிக்க வருகிறாராம்.

vadivel9
vadivel9

அதுமட்டுமல்லாமல் ஷங்கரும் மீண்டும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வடிவேலுவிடம் தூது விட்டதாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் செஞ்ச தப்ப வடிவேலு ஒத்து கிட்டார் இனிமேல் பட பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கும் என கேட்டு வருகிறார்கள்.