கால் ஷீட் கேட்டு என் வீட்டு பக்கம் வந்துராத அவ்வளவுதான்..! சுந்தர் சி -யை எச்சரிக்கை அனுப்பிய வடிவேலு..! என்ன நடந்தது தெரியுமா.?

0
sundar.c
sundar.c

நடிகர் வடிவேலு 90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் எந்த ஒரு நடிகருடன் கைகோர்த்தாலும் அந்த காம்பினேஷன் சிறப்பாக அமைந்துவிடும் அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த படங்கள் பெரிதும் வெற்றிப் படங்கள் தான்.

அந்த வகையில் வின்னர், கிரி, லண்டன் என தொடர்ந்து வெற்றியைக் கண்டது இந்த ஜோடி. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஜோடி தாக்கு பிடிக்க முடியாமல் சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்தனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். சுந்தர் சி வடிவேலு ரெண்டு என்கின்ற படத்தில் இணைந்தார்கள் ஆனால் இந்த இரண்டு படத்தில் சந்தானம் நடிப்பதை வடிவேலுக்கு  தெரிவிக்காமலேயே சுந்தர் சி காட்சிகளை எடுத்து முடித்தார்.

பின் படத்தை முழுவதையும் எடுத்த பிறகு காட்சியை போட்டுக் காண்பிக்க அனைவரையும் அழைத்துள்ளனர் அப்பொழுது படத்தை பார்த்த வடிவேல் ஷாக் ஆகி போனார். எனக்கு தெரியாமலேயே சந்தானம் எப்படி இந்த படத்தில் நடித்தார் என கோபப்பட்டு வெளியே வந்து சுந்தர் சி உடன் சண்டை போட்டுள்ளார் மேலும் இனி எனது கால்ஷீட் கேட்டு எனது வீட்டு பக்கம் வந்துராதீங்க என கூறியுள்ளார் வடிவேலு.

வடிவேலு ஒரு சிறந்த நடிகர் என்பதை சுந்தர்சியும் நன்கு உணர்ந்திருந்தார். இதனால் இந்த பிரச்சனையை சுமுகமாக கொண்டு வர சுந்தர் சி என்னென்னவோ பண்ணி பார்த்தார் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை ஒரு கட்டத்தில் சுந்தர் சி யின்  மனைவி குஷ்பூ பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார் மேலும் குஷ்பூ தயாரிப்பில் சுந்தர்சி வடிவேல் காமினேஷன் மீண்டும் ஒரு படம் தொடங்கப்பட்டது அந்தப் படம் தான் நகரம்.

இந்த படத்தில் வடிவேலு நடிக்க 10 நாட்கள் கால் சீட் கேட்கப்பட்டது ஒரு நாளைக்கு 10 லட்சம் எனக்கு கொடுக்க வேண்டும் பத்து நாளைக்கு ஒரு கோடி சம்பளம் தரவேண்டும் என பேசப்பட்டது அதன்படி சூட்டிங் நடந்தது ஆனால் பழசை மறக்காத வடிவேலு ஷூட்டிங் தாமதமாக வருவது மேலும் சுந்தர் சிக்கு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார் ஒரு கட்டத்தில் டார்ச்சல் தாங்க முடியாத சுந்தர் சி எனக்கு நெஞ்சு வலிக்கிறது என கூறி கேரவனில் படுத்துக்கொண்டாராம். உதவி இயக்குனரை அழைத்து வடிவேலுவை வைத்து இன்று அவரது எல்லா காட்சிகளையும் எடுத்து விடுங்கள் என கூறிவிட்டாராம்.

அவர் சொன்னது போலவே வடிவேலுவை வைத்து 9 நாளுக்குள்ளையே அனைத்து காட்சிகளையும் எடுத்து விட்டனர் ஆனால் வடிவேலு இதை நன்கு உணர்ந்து கொண்டு நான் ஒன்பது நாட்களிலேயே எனது காட்சிகள் அனைத்தையும் முடித்து தருகிறேன் ஆனால் எனக்காக பேசப்பட்ட 10 நாள் சம்பளம் தர வேண்டும் என கூறியுள்ளார் அப்படி தரவில்லை என்றால் நான் டப்பிங் பேச வரமாட்டேன் என கூறினாராம் ஒரு வழியாக அவருக்கு 10 நாள் சம்பளம் கொடுத்து டப்பிங் பேச வர வைத்தனர் அதன் பிறகு படம் வெளியானதாம். இனி வடிவேலு உடன் நாம் கூட்டணி சேர்ந்தால் அது சரிப்பட்டு வராது என கூறி இருவரும் பிரிந்து தற்பொழுது தனித்தனியாக படங்களில் பணியாற்றி வருகிறனர்