கமல்ஹாசனை அலற வைத்த வடிவேலு.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் புதுப்புது வித்தைகளை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை தற்பொழுது மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகில் காமெடி நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான் என கூறி வந்தார்கள்.

ஆனால் வடிவேலு தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூடிய சீக்கிரம் மீண்டும் பல திரைப் படங்களில் கமிட்டாகி நடிக்க வருவார் என தகவல் கிடைத்துள்ளது என்னதான் வைகைப்புயல் வடிவேலு தற்போது சினிமாவில் நடிக்க முடியவில்லை என்ற நிலையில் இருந்தாலும் அவர் நடித்த பல திரைப்படங்களின் காட்சி தற்பொழுது வரை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பார்த்தால் நாள்தோறும் அவரது காமெடியை பார்க்காமல் பல மக்கள் தூங்குவதே இல்லை என்ற அளவிற்கு அவரது காமெடி காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. வடிவேலின் காமெடிகாட்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது அதில் பல சினிமா பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் அந்த வகையில் பார்த்தால் ஒரு முறை வடிவேலுவின் திரைப்படத்தை பார்த்துவிட்டு கமல் விழுந்து விழுந்து சிரித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் வடிவேலு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த திரைப்படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்துவிட்டு கமல்ஹாசன் விழுந்து விழுந்து சிரித்தாராம் அதற்கு முக்கிய காரணம் வடிவேலு நடித்த அனைத்து காட்சியும் காமெடியாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vadivel83
vadivel83

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வடிவேலு போருக்கு செல்லும் பொழுது செய்யும் காட்சி கமலால் மறக்க முடியாத அளவிற்கு இருந்ததால் இதனை கமல்ஹாசன் வடிவேலுவை பற்றி நாசரிடம் கூறியுள்ளாராம் கமல்ஹாசன் வடிவேலு பற்றி இவ்வளவு கூறினார் என நாசர் கூறியதாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.