வடிவேலு, சந்தானத்திற்கு போட்டியாக மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர்.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

0
actors
actors

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய காமெடியனாக பார்க்கப்பட்டவர் கவுண்டமணி 80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்த இவர் அஜித், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், கார்த்தி, பிரபு போன்ற டாப் ஹீரோக்களுக்கு காமெடியனாக நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

மேலும் காமெடியன்களில் அதிக சம்பளம் வாங்கிய ஹீரோவாகவும் கவுண்டமணி திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் திரையுலகில் காமெடியனாக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தியவர். இவரும் , செந்தில் கம்போ எப்போதுமே ஒரு வெற்றி கம்போ என்பது குறிப்பிடதக்கது. கவுண்டமணி தொடர்ந்து திரை உலகில் வெற்றியை கண்டு வந்தாலும்..

கடந்த சில வருடங்களாக படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்தார் ஆனால் இவர் நடித்த அந்த படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றன. இருப்பினும் கவுண்டமணி ஒத்த காலில் நிற்கிறார் ஹீரோ கதை என்றால் வாருங்கள் இல்லை என்றால் வாராதீர்கள் என்பது போலவே அவரது எண்ணம் இருக்கிறதாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த இருப்பதாக கூறப்படுகிறது. பேயை காணும் படத்தை இயக்கி வெற்றிகண்ட அன்பரசன் தற்பொழுது இயக்க உள்ள திரைப்படம் பழனிச்சாமி வாத்தியார் இந்த திரைப்படத்தில் தான் கவுண்டமணி ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வெகு விரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.. வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து தற்பொழுது கவுண்டமணியும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.