செந்தில்,கவுண்டமணி தமிழ் திரையுலகில் நடித்து வந்தபோது அவர்களுடன் இணைந்து காமெடி நடிகனாக நிறைய திரைப்படங்களில் பணியாற்றி வந்தவர் தான் வைகைப்புயல் வடிவேலு செந்தில்,கவுண்டமணி காலத்திலிருந்தே தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்று கூட கூறலாம் அந்த வகையில் பார்த்தால் வடிவேலு இல்லாத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு இவர் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அதிலும் குறிப்பாக இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் இவர் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.
வடிவேலு தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவர் கூடிய சீக்கிரம் திரைப்படங்களில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதிலும் குறிப்பாக இவர் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் கூடிய சீக்கிரம் நடிப்பார் என தகவல் வைரலாகி வருகிறது இந்நிலையில் வடிவேலு தற்பொழுது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப் போகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதில் வடிவேலு முக்கிய நடிகர்களை போல வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தால் தமிழ் சினிமாவில் எப்படியோ ஒரு வழியாக நடிக்க வந்துவிடுவார் அவ்வாறு இவர் நடித்து விட்டால் தற்பொழுது உள்ள காமெடி நடிகர்கள் எல்லாம் ஒதுங்கும் நிலைமை வந்துவிடும் என ஒரு சில ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.