தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கும் “வடிவேலு” – தமிழ் சினிமா வரவேற்குமா..

காமெடி என்றால் நாம் நினைவிற்கு வரும் நடிகர்களில் முதன்மையானவர் வடிவேலு இவர் 90 கால கட்டங்களில் பல்வேறு நடிகரின் படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை சம்பாரித்தார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

அதை தொடர்ந்து காமெடியனாக ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு ஏராளமாக குவிந்தது அப்படித் தான் இம்சை அரசன் 23ஆம் படத்தில் நடித்தார் முதல் படமே இவருக்கு பிரம்மாண்டமான வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் நடித்தார் வெற்றியை மட்டுமே சம்பாதித்து ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஹீரோவான பிறகு பிரச்சினையும் வந்தது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாவது பாகத்தின் பொழுது ஷங்கருக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட தயாரிப்பு சங்கம் இனி இவரை வைத்து படம் பண்ண கூடாது என ஒரு புதிய கட்டளையை போட்டது அதனால் நான்கு வருடம் சினிமா பக்கமே தென்படாமல் இருந்த வடிவேலு இனி அவ்வளவுதான் என நினைத்தனர்.

ஒரு வழியாக அந்த பிரச்சினைகள் இருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன், தலைநகரம் 2 மற்றும் பல்வேறு பெயிரிடப்படாத படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார்.

திரும்ப வந்துள்ள வடிவேலு தன்னுடன் நடித்த காமெடி நடிகர்களையும் தற்போது சந்தித்து வாய்ப்பு தருவதாக சொல்லி அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்துகிறார். இது ஒரு நல்ல விஷயமாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது அந்த வகையில் போண்டா மணி உள்பட பலரையும் ஒன்று சேர்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

Leave a Comment