வடிவேல் நடிக்க வேண்டிய படத்தில் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம் தெரியுமா? அதுவும் மெஹா ஹிட் திரைப்படம்.!

தமிழ் சினிமாவின் வசூல் மாணவனாகவும் முன்னே நடிகராகவும் விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விஜய் ஆரம்ப கட்டத்தில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த தோல்விகளில் இருந்து மீண்டு வந்து வெற்றிக் கனியை ருசித்தவர்.

தளபதி விஜய் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார், மேலும் மணிவண்ணன், தாமு, வையாபுரி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது விஜய்க்கும் இந்த திரைப்படம் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதையை முதலில் வடிவேலுவை மனதில் வைத்துதான் எழுதப்பட்டதாம். ஆனால் தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் இந்த கதை முரளியிடம் சென்றது என எழில் கூறினார், முரளிக்கும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை அதன்பிறகுதான் தளபதிவிஜய் இடம் இந்த கதையைக் கூற வாய்ப்பு கிடைத்தது இயக்குனர் எழிலுக்கு.

கதையை கேட்டவுடன் தளபதிவிஜய் ஓகே சொல்லிவிட்டார், பின்பு தயாரிப்பாளரையும் ரெடி பண்ணி விட்டாராம், துள்ளாத மனம் துள்ளும் திரைப்படம் முதலில் காமெடி திரைப்படமாக தான் கதை எழுதப் பட்டது பின்பு விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்ததால் கொஞ்சம் கமர்ஷியல் அம்சங்களுடன் கதையை மாற்றி அமைத்தார் எழில்.

பிறகு விஜய் நடித்து மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம்தான் துள்ளாத மனமும் துள்ளும்.

Leave a Comment