வடிவேல் பாலாஜி உடலுக்கு இரங்கல் தெரிவிக்காமால்.! கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.! கழுவி ஊத்தும் ரசிகர்கள்.

0

ramyapandiyan photo: மொட்டமாடியில் போட்டோஷூட் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமுத்திரகனி நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆண்தேவதை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே எப்படியாவது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறம் இருந்தாலும் நாள்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்பொழுது வடிவேல் பாலாஜி இறந்ததற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

எனவே ரசிகர்கள் ரம்யா பாண்டியனின் மீது மிகவும் கடுப்பாக இருந்து வருகிறார்கள். தற்போது தான் சில காலங்களாக இணைய தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வந்தார் ஆனால் தற்பொழுது அந்த கவர்ச்சியான புகைப்படமே இவருக்கு பெரிய டுவிஸ்ட் வைத்துள்ளது.

ramya pandian
ramya pandian