தமிழ் சினிமாவில் வடிவேலுவை காமெடியனாக தூக்கிவிட்ட திரைபடங்கள்.! பார்ட் 3

தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கும் அதிக பங்கு உண்டு. அந்தவகையில் நடிகர் வடிவேலு நடித்த  காமெடி திரைப்படங்கள் பல உள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிறைய திரைப்படங்களில் தனது தனி திறமையால் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்களை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

வெற்றிக்கொடிக்கட்டு:- இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வெற்றி கொடி கட்டு இந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு இவர்கள் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை:-குஷ்பூ,கோவை சரளா,விவேக்,வடிவேலு இவர்கள் நடிப்பில் வெளியானகாமெடி திரைப்படம் தான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இத்திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக கோவை சரளா அவர்கள் நடித்து அசத்தியிருப்பார்.

மாயி:- சரத்குமார் மற்றும் மீனவர்கள் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாயி. இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடியான” வாம்மா மின்னல் என்ற காமெடி அப்போது மிகவும் பேசப்பட்டு வந்தது.

maayi

காவலன்:- இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்ற திரைப்படம் தான் இத்திரைப்படத்தில் ராஜ்கிரன், அசின், வடிவேலுபோன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடிகளுக்கு எல்லை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

kavalan

23ம் புலிகேசி:- நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் 23ம் புலிகேசி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நாட்டின் அரசர் செய்யும் காமெடி கலாட்டா திரைப்படமாக நடிகர் வடிவேலுக்கு அமைந்திருக்கும்.

போக்கிரி:- நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் போக்கிரி திரைப்படம்முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படம் ஆகும்.இத்திரைப்படத்தில் பாடி சோடாவாக நடித்திருப்பவர் நடிகர் வடிவேலு திரைப்படத்தில் இவரது காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.

வில்லு:- நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சுமாரான வெற்றி கொடுத்த திரைப்படம் தான் வில்லு. என்னதான் சுமாரான வெற்றி கொடுத்திருந்தாலும் இதில் வரும் வடிவேலின் காமெடி அவ்வளவு அருமையாக இருக்கும்.

வசீகரா:- இத்தரை படத்திலும் விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படம் இத்திரைப்படத்தில் சினேகா,நாசர், வடிவேலு இவர்கள் நடித்துள்ளனர். அந்தப் படத்தில் வடிவேலு பொம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

வின்னர்:- பிரசாந்த் நடிப்பில் வெளியான ஒரு ஆக்சன் திரைப்படம் தான் பின்னர் இத் திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் கைப்பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் அவ்வளவு அருமையாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

தில்லாலங்கடி:- நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஒரே ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படம் தில்லாலங்கடி படத்தில் தமன்னா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம்தான் தில்லாலங்கடி இத்திரைப்படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகர் வடிவேலு.

லண்டன்:- பிரசாந்த் மற்றும் பாண்டியராஜ் இவர்கள் இணைந்து நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் லண்டன் திரைப்படத்தில் வடிவேலு அவர்கள் வக்கீல் வேடத்தில் நடித்து இவரது காமெடிக்கு தடையே இல்லாத அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார்.

காதலன் :-பிரபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காதலன் திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் காமெடிகள் இன்று வரையிலும் ரசிகர்களுக்குஏற்றவாறு இருந்து வருகிறது.

kathalan

இது மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்படங்களில் வடிவேலு அவர்கள் தனது சிறந்த காமெடி நடிப்பால் அனைவரது மனதையும் கொள்ளை அடித்துள்ளார் என்றுதான் கூறவேண்டும் இவர்கள் நடிப்பில் வெளியான இன்னும் சில திரைப்படங்கள் உள்ளது. எம்டன் மகன், விரலுக்கேத்த வீக்கம், தலைநகரம், தவசி, சுந்தரா ட்ராவல்ஸ், கந்தசாமி, மருதமலை, ஆதவன், நகரம், அரசு, சிங்காரவேலன், மிடில் கிளாஸ் மாதவன், காமராசு, சச்சின், கிரி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version