தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் நடிப்பில் வெளியாகிய வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த நிலையில் வடசென்னை இரண்டாம் பாகம் வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் திடீரென சமூக வலைதளத்தில் வடசென்னை இரண்டாம் பாகம் ட்ராப் ஆனதாக பரவியது, இந்த நிலையில் இதைப்பற்றி முதல் முறையாக தனுஷ் ட்விட்டரில் பேசியுள்ளார், அவர் பேசியதாவது வடசென்னை இரண்டாவது பாகம் டிராப் ஆனதாக பரவும் தகவல் உண்மை இல்லை எனக் கூறி உள்ளார்.
அதேபோல் என்னுடைய படங்களை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம், இவ்வாறு தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Don’t know what caused this confusion among my fans. Vadachennai part 2 is very much on , Unless you see any official confirmation from my Twitter handle please do not believe in rumours regarding any project of mine. Thank you. Love you.
— Dhanush (@dhanushkraja) July 15, 2019