விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் வாரிசு திரைப்படம்..! எப்பொழுது தெரியுமா..?

0
vaarisu-sun-tv
vaarisu-sun-tv

தமிழ் சினிமாவில் சுமார் 13 வருடங்களுக்கு பிறகு விஜய் அஜித் ஆகிய இருவரும் ஒன்றாக போட்டிபட்ட திரைப்படம் என்றால் அவை வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் தான் அந்த வகையில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மக்களுக்கு ஒரு கருத்து தெரிவிக்கும் வகையில் அமைந்தது.

அதேபோல தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்ததன் காரணமாக ரசிகர்கள் பலரும் குடும்பத்துடன் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்து வந்தார்கள். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படம்  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளிவந்ததை தொடர்ந்து வெளிவந்த முதல் இரண்டு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது நாம் பார்த்திருந்தோம். அதன் பிறகு நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக சக்கபோடு போட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் இதர கதாபாத்திரத்தில் சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த் சங்கீதா போன்ற பல்வேறு பிரபலங்கள்  இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில் இந்த திரைப்படம் சன் டிவியில் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஒளிபரப்பாகப் போகிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த வாரிசு திரைப்படமானது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.