கண்ணா வாரிசு துணிவுலாம் சும்மா டிரைலர் தான்..! தீபாவளிக்கு தான் இருக்கு சரவெடியே – மீண்டும் மோதும் அஜித் விஜய்..!

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ஆகிய இருவருமே உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருவது மட்டும் இல்லாமல் இவர்களுடைய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது மட்டும் இல்லாமல் வசூலில் இந்த இரண்டு திரைப்படங்களுமே கெத்து காட்டி வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படங்களில் யார் நம்பர் ஒன் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது மட்டும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வசூலில் கெத்து காட்டி வருகிறார்கள் இந்நிலையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் மற்றும்  அஜித் நடிப்பில் வெளியான வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால் தற்பொழுது இவர்களுடைய நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களின் ரசனையே பூர்த்தி செய்துள்ளது இந்நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி கோலிவுட்டில் மிகப்பெரிய பேசும் பொருளாக ஆனது மட்டுமில்லாமல் அடுத்ததாக விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் திரைப்படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சரவெடியாக வெடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அந்த வகையில் விஜய் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் மற்றும் தல அஜித் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் சஞ்சய் தத், மற்றும் மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள் மேலும் விஜய்க்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் திரிஷா நடிப்பது மட்டுமில்லாமல் அஜித்தின் திரைப்படத்திலும் ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதை விக்னேஷ் சிவன் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

போற போக்கைப் பார்த்தால் பொங்கலை விட தீபாவளியில் வேட்டு சத்தம் காதை கிழிக்க போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Comment