தாடி வச்ச இயக்குனருடன் ஜோடி சேரபோகும் வாணி போஜன்..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டுதான்..!

vaani bhojan latest movie news: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகள் சீரியலில் வருவது வழக்கம்தான் ஆனால் தற்போது சீரியல் நடிகைகள் தன்னுடைய சிறந்த நடிப்பை சீரியல் மூலமாக வெளிக்காட்டி எளிதில் சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் நயன்தாராவாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன் இவர் சமீபத்தில் வெள்ளித் திரையில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த ட்ரிபிள்ஸ் எனும் வெப் தொடரிலும்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொதுவாக பார்ப்பதற்கு குடும்ப பெண் போன்று முகத் தோற்றத்தில் இருக்கும் நடிகை வாணி போஜன் சமிபத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்புகிறார் அந்த வகையில் அவர் நடித்த லிப் லாக் காட்சியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி உள்ளன.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சசிகுமாருடன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற முடிந்துவிட்டதாம் மேலும் இந்த திரைப்படத்தில் வாணிபூஜன் உடன் பிந்து மாதவியும் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்..

vaani-bhojan

Leave a Comment

Exit mobile version