வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க ரெடியாகிய சூர்யா.! வைரலாகும் வாடிவாசல் படப்பிடிப்பின் புகைப்படங்கள்

suriya-vadivasal

நடிகர் சூர்யா சமீப காலமாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வந்தது ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதுகுறித்து பாண்டிராஜ் அவர்கள்  ஒரு பேட்டியில் அனைவரையும் திருப்தி படுத்த யாராலும் முடியாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஈசிஆர் பகுதியில் மிகப்பெரிய மைதானம் அமைக்கப்பட்டு ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கலந்து கொண்டுள்ள ஒத்திகை படப்பிடிப்பு குறித்து மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் சூர்யா அச்சு அசல் ஜல்லிக்கட்டு வீரரை போல் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு விரைப்பாக நிற்கிறார் இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

vaadivasal
vaadivasal

ஏற்கனவே சூர்யா வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பழகி வருகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்காக பிரதியாக பயிற்சி பெற்ற வீரர்கள் இடம் சூர்யா பயிற்சி பெற்று வருவதாகத் செய்திகள் வெளியானது.

vaadivasal

மேலும் இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சிகள் இல்லாமல் சூர்யா நிஜ காளைகளுடன் மோதும் காட்சியில் நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்காக ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

vaadivasal
vaadivasal