வாடிவாசல் சூர்யாவின் மாஸ் வீடியோவை வெளியிட்டு அதகள படுத்திய படக்குழு.?

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி பரவி வருகிறது. இந்த பயிற்சி வாடிவாசல் படத்திற்காக  சூர்யா அவர்கள் முழு நேரத்தையும் செலவிடுவதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ் தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு வீரர்களுடன் காலை அடக்குவதற்காக  சூர்யா அவர்கள் போர்க்களத்தில் நுழைவதை இந்த வீடியோ மூலம் அழகாக காண்பித்து உள்ளார். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்து நடிகர் சூர்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ டீசர் அல்ல என்றும் அவர் தெளிவாக குறிப்பிட்டார். காளையின் விளையாட்டான ஜல்லிக்கட்டு நாவலை தழுவி எடுக்கப்பட்ட வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்குனர் மேலும் நடிகர் சூர்யா அவர்கள் முதன்முறையாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கடைசி மூன்று நிமிடங்கள் திரையில் தோன்றி மிரட்டினார். அதன் தொடர்ச்சியாக விக்ரம் 3ல் 2023இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதே சமயத்தில் வாடிவாசல் படத்துக்காக பயிற்சி செய்யும் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இயக்குனர் சிவா, டிஜே ஞானவேல், சுதா கொங்கரா, மற்றும் ஆர் ரவிக்குமார் ஆகியோருடன் சூர்யா இன்னும் சில  திட்டங்களை செயல்படுத்த உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது. அதே சமயத்தில் வாடிவாசல் படத்திற்காக காலை உடன் சூர்யாவின் சோதனை படப்பிடிப்பின் படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version