வெளியானது வா வாத்தி பாடல் வீடியோ.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில தகவல் வெளியாகியிருக்கிறது.

இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அந்த வகையில் வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்க்தா கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இந்த படம் வெளியாகி பிறகு கலவையான விமர்சனத்தோடு வெளியானது மட்டுமல்லாமல் வசூலிலும் ஓரளவு லாபம் பார்த்து விட்டது. இதனை அடுத்து நடிகர்கள் தனுஷ் அவர்கள் தற்போது அடுத்த படமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே விவாகரத்து பிரச்சனை வேற பூகம்பமாக வெடித்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க வாத்தி படத்தின் பட குழு தற்போது வா வாத்தி பாடலின் முழு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ வா வாத்தி பாடலின் முழு வீடியோ..

Leave a Comment