டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய உத்தப்பா – அந்த ஆட்டத்தை யாருக்காக அர்ப்பணிக்கிறார் தெரியுமா.?

0

ஐபிஎல் இறுதிகட்ட போட்டியை நெருங்கியுள்ளது. சில தினகங்களுக்கு முன்பு சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்ல பலப்பரீட்சை நடத்தின. முதலில் டெல்லி கேப்பிடல் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 6 ஓவர்களில் ரன்களை அடித்தது.

போகப் போக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஒரு கட்டத்தில் டெல்லி அணி 172 ரன்கள் எடுத்தது அதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே தொடக்கத்திலேயே டுப்லஸ்ஸிஸ் விக்கெட்டை இருந்தாலும் அதன் பிறகு இரண்டாவது வீரராக மொயின் அலி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக உத்தப்பா களமிறங்கினார்.

முதல் பந்தையே பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அதன்பின் தொடர்ந்து சிக்ஸ்ர்களும், பவுண்டரிகளும் அடித்து டெல்லி பந்து வீசளார்களை சின்னாபின்னமாகினார் மேலும் அவரது ஆட்டத்தை தடுக்க முடியவில்லை.  44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் தோனி அதிரடி காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது போட்டி முடிந்த பிறகு உத்தப்பா பேசினார். அப்போது அவர் கூறியது இந்த ஆட்டத்தில் எனது சிறந்த பங்களிப்பை கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி இன்று என்னுடைய மகனின் பிறந்த நாள் அவனுக்காக இந்த இன்னிங்சை நான் அர்ப்பணிக்கிறேன்.

நான் பேட்டிங் செய்ய சென்ற போது சென்னை அணிக்கு நல்ல துவக்கம் தேவைப்பட்டது அதை நான் செய்ததில் மகிழ்ச்சி. என தெரிவித்தார். வீரர்களை பாதுகாப்பதில் சென்னையை அணி யை விட வேறு எந்த அணியும் கிடையாது அதனால் தான் அங்கு இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர் என கூறினார்.