மேட்ச் பாக்க போன அன்னாச்சி பட நடிகைக்கு நடந்த சோகம்.! அடேய் என் செல்லத்தை இப்படி ஆக்கி விட்டுட்டீங்களேடா

urvashi rautela : நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹிந்தியில் 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக நடிகையாக அவதாரம் எடுத்தார் அதனை தொடர்ந்து கன்னடத்தில் ஐரவாதா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு மீண்டும் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்பு நடனம் ஆடும் நடிகையாக உருமாறினார்.

அதன் விளைவாக இவர் பல திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் இவர் நடனமாடும் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வருகிறார்கள் அதற்கு காரணம் இவர் நடனமாடும் பாடலில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படி ஒரு சில பாடலுக்கு நடனம் ஆடி வந்த ஊர்வசி ரவுத்தேலா தமிழில் முதன்முதலாக அண்ணாச்சி படத்தில் அறிமுகமானார்.

அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த திரைப்படத்திற்கு அவருக்கு கோடிகளில் சம்பளமாக கொடுக்கப்பட்டது அதற்கு காரணம் அண்ணாச்சியுடன் நடிக்க தமிழில் உள்ள பல நடிகைகளை பட குழு அனுகியுள்ளார்கள் ஆனால் அனைவரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் அதனால் தான் இப்படி ஒரு நடிகையை உள்ளே இறக்கினார்கள்.

இந்த நிலையில்ஊர்வசி ரவுத்தேலா இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பார்க்க வந்துள்ளார் இந்த போட்டியை பார்க்க அமித்ஷா உள்ளிட்டோர் பலர் மைதானத்திற்கு வந்திருந்தார்கள் அந்த வகையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மேட்ச் பார்க்க வந்திருந்தார் மேட்ச் பார்க்க வந்த ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ஒரு சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது அதாவது தன்னுடைய தங்கத்திலான ஐபோன் ஒன்றை மைதானத்தில் தொலைத்துள்ளார் அது ஒரிஜினலான 24 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட போன்.

அந்த ஐபோனை அவர் தொலைத்து விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் யாராவது வைத்திருந்தால் விரைவாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்த நகலையும் அவர் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மேட்ச் பார்க்கப் போனது ஒரு குத்தமா இப்படி செல்லத்துக்கு ஆகிவிட்டது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்