ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தளபதி 66 படக்குழுவினர்கள் வெளியிட்ட அப்டேட்.!

தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் படத்தை அடுத்து  தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில்  நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்து வருகிறார்.

குடும்ப சென்டிமென்டாக உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது.

vijay

தளபதி 66 திரைப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தற்போது  இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக  தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் அவர்கள் சென்னை திரும்பிய வீடியோ சோசியல் மீடியாவில்  பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தான் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது.

vijay

தளபதி 66 திரைப்படம் முடிந்த கையோடு தளபதி 67 திரைப்படத்தில்  கமிட்டாகியுள்ளார்  என்று கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வரைக்கும் வெளியாகவில்லை.

Leave a Comment

Exit mobile version