“வாரிசு” படத்திலிருந்து வெளிவந்த unseen வீடியோ.. கொண்டாடி தீர்க்கும் தளபதி ரசிகர்கள்

0
varisu
varisu

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” என்னும் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்ததை அடுத்து காஷ்மீரில் கடும் குளிரென்று கூட பார்க்காமல்..

நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டு வருகின்றனர். இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு முன்பாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. வசூலில் 300 கோடிக்கு மேல் அள்ளியது.

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரை திரையரங்க பக்கம் கட்டி இழுத்தது.  பார்த்துவிட்டு தலையில் தூக்கி வைத்து வாரிசு படத்தை கொண்டாடினார். தமிழை தாண்டி கேரளா, தெலுங்கு, போன்ற இடங்களில் இந்த படத்திற்கான வரவேற்பு உச்சத்தில் இருந்தது.

அதன் காரணமாக வசூலில் பட்டையை கிளப்பியது. திரையரங்கில் வெற்றி நிலை கண்டதை தொடர்ந்து அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகி வெற்றி கண்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் unseen வீடியோ ஒன்றை வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது.

அதில் தளபதி விஜய் வில்லன் பிரகாஷ்ராஜின் ஆபிஸ்சுக்கு சென்று அவரை மிரட்டும் அந்த அசத்தலான வீடியோ தான் இது.. வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேற லெவல், மாஸ் எனக் கமெண்ட்  அடித்து லைக்குகளை தட்டி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் தளபதி விஜய் செம மாஸாக பேசும் அந்த வீடியோவை..