புதிதாக பிஎம்டபிள்யூ கார் வாங்கிய அசத்திய நடிகை ரம்யா பாண்டியன் – ரசிகர்களை கவர்ந்திழுத்த புதிய புகைப்படம்.

ramya-pandian
ramya-pandian

தமிழ் சினிமாவில் எடுத்த உடனேயே குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடையாத நபராக ரம்யா பாண்டியன் இருந்தார் அதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட ரம்யா பாண்டியன் முதலில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும்.

என்பதற்காக தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி சேலையை அணிந்து கொண்டு இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தீயாய் பரவியது அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் வெள்ளித்திரையில் மற்றும் சின்னத்திரையில் கிடைக்க ஆரம்பித்தது.

முதலாவதாக சின்னத்திரையில் பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும்  போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினார் பின் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது ஏன் கடைசியாக கூட ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் அதையும் தாண்டி பிரபலங்களுக்கும் பிடித்து போனது. அதனால் தற்போது ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 2022ல் தற்போது இடும்பன்காரி, பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருந்தாலும் நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் இப்பொழுதுகூட நடிகை ரம்யா பாண்டியன் பிஎம்டபிள்யூ புது கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். அதன் புகைப்படத்தை கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். இதோ நீங்களே பாருங்கள் பிஎம்டபிள்யூ கார் உடன் இருக்கும் ரம்யா பாண்டியன்.

ramya pandain
ramya pandain