விஜய்யிடமிருந்து கைநழுவிய படத்தை வெற்றிபடமாக மாற்றியா சூர்யா.! எந்த படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சூர்யா அவர்கள் 2002 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் லைலா, சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்ரமன் அவர்கள் பூவே உனக்காக வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் தளபதி விஜய் நடிப்பதாக ஒப்பதந்தம் செய்யப்பட்டது.

இருப்பினும் சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று விட்டது அதன் பின்பு தான் சூர்யா அவர்கள் அந்த படத்தில் நடித்தார் என கூறப்பட்டு வருகிறது. படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் முலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் சூர்யா.

vijay-laila

சில காரணங்களால் தளபதி விஜய் மற்றும் இயக்குநர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் எந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தளபதி அவர்கள் மிஸ் பண்ண படங்களில் இதுவும் ஒரு முக்கியமான படமாகும்.

Leave a Comment