உன்னை நினைத்து திரைப்படத்தில் இருந்து விஜய் விலகியதற்கு காரணம் இதுதானா.! பல நாள் ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் மிகப்பெரிய நடிகர் அவர், தற்பொழுது தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இணையாக வளர்ந்திருக்கும் நடிகர் ஆவார், இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் டீசர் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின்  பாடல்கள் எதாவது வெளியாகும் என தெரிகிறது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரமேஷ்கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார், அதில் அவர் விஜய் ஏன் உன்னை நினைத்து திரைப்படத்தில் சிலநாட்கள் நடித்துவிட்டு விலகினார் என்ற விவரத்தை பட்டுனு போட்டு உடைத்தார்.

அவர் கூறியதாவது விஜய் இயக்குனர் விக்ரமன் இடம் சென்று சார் இனி இதுபோல் காதல் காட்சி திரைப்படங்கள் எனக்கு வேண்டாம் நான் என் பாதையை ஆக்ஷனுக்கு மாற்ற உள்ளேன் என கூறியதாக ரமேஷ்கண்ணா தெரிவித்துள்ளார். உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய்க்கு பிறகு பிரசாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது பின்புதான் சூர்யா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.

Leave a Comment