சன் பிக்சர் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மிரட்டலான டைட்டில் இதோ.!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம், போன்ற திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றார் நடிகர் தனுஷ்.

இதனைத்தொடர்ந்து தனுஷின் D4 படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்ட நிலையில். தற்போது இந்த படத்தின் தலைப்பை குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் டைட்டிலை இதுவரைக்கும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தற்போது இது குறித்த விவரம் வெளியானது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் மாறன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் அவர்கள் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து தனுஷின்  D44 திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை குறித்து அப்டேட் மூலம் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பின்னர் ஆறு வருடங்கள் கழித்து தனுஷுடன் மீண்டும்  இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

dhanush

இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், போன்ற பல நட்சத்திரங்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து தனுசுடன் பிரபல நடிகையான ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், மற்றும் நித்யா மேனன் இவர்கள் முதன் முதலில் தனுஷுடன் இணைந்துநடிக்க உள்ளனர்.

மூன்று நடிகைகள் நடித்தாலும் இப்படி ஒரு பெயரா என பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது இந்த தகவல், அதாவது இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம், என பயணித்துள்ளது. திருச்சிற்றம்பலம் என்பது தமிழ் சைவ சமய நூல்களில் தவிர்க்க முடியாத சொல்லாக இருந்தது. இந்த சொல் சிதம்பர நாகர் மற்றும் தில்லை நடராஜன் இந்த புனித சொல் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush

Leave a Comment

Exit mobile version