பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி சமூக வலைதளத்தில் தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னுடைய பேச்சால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர் பிக் பாஸ் ஜூலி. இந்தப் போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி ஓவியாவை டார்கெட் செய்து பொய் பேசியதால் இவர் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் அதனால் ஜூலியை இன்றுவரை வெறுத்து தான் வருகிறார்கள் பல ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் ஜூலி.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்பொழுது நடிகையாக உருவெடுத்து விட்டார் இந்தநிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.
அந்த வகையில் தற்போது ஜூலி புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்து அதனை ஷேர் செய்தும் அதை பார்த்து ரசிகர்கள் திட்டித் தீர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்தநிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற அன்பே வா பாடல் ரங்கோ ரங்கோலி என்ற வரிகளுக்கு பாவாடையை பறக்கவிட்டு ஜூலி நடனமாடியுள்ளார் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நாளுக்குநாள் அழகு கூடிக்கொண்டே போகிறது என ஜொள்ளு விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அடங்கவே மாட்டீங்களா எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.