உலகநாயகன் கமலஹாசனை யார் என கேட்ட நபர். தரமான பதிலடி கொடுத்த அமெரிக்க நடிகை. உலகநாயகன் என்றால் சும்மாவா

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மெக்கென்ஸி,  இவர் ஃபேஷன் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், அதுமட்டுமில்லாமல் பிரபலமான ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கல் வெஸ்ட் மோரின் மகள் தான் இந்த மெக்கென்ஸி.

நடிகை மெக்கென்ஸி அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கமலஹாசன் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் கமல் பற்றி சில சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது உலகநாயகன் கமலஹாசன் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் பலபேர் கமல் பற்றி என்னிடம் கேட்டுள்ளார்கள்.

நான் மிகவும் சிறுவயது பெண்ணாக இருக்கும் பொழுது என்னுடைய அப்பா அவருடைய ஒப்பனை கலைஞராக இருந்துள்ளார், அதுவும் கமல் நடிப்பில் வெளியாகிய அவ்வைசண்முகி திரைப்படத்தில் தான், அதனால் நாங்கள் இன்னும் கமலஹாசனுடன் தொடர்பில் தான் இருக்கிறோம். சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு தான் நான் கமலை பார்த்தேன்.

உலகநாயகன் கமலஹாசன் நான் சிறு வயதாக இருக்கும் பொழுது ஒரு உடையை வாங்கித் தந்தார் அந்த உடையை போட்டுக்கொண்டுதான் புகைப்படம் எடுத்தோம் அந்த இரண்டாவது புகைப்படத்தில் தான் கமலஹாசன் வாங்கி தந்த உடையில் நானும் என்னுடைய அப்பாவும் இருக்கிறோம், இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் யார் என்று தெரியவில்லை, நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தது மிகவும் அருமை என பதிவிட்டு இருந்தார் அதற்கு உடனடியாக அவர் இவர் சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர்.

kamal
kamal

ஹாலிவுட் நடிகர்களை விட இவர் மிகப் பெரியவர் எனக் கூறினார் அது மட்டுமில்லாமல் மற்றொரு நபர் அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என வாழ்த்தினார், அதற்கு அந்த நடிகை அதுவே என்னுடைய கனவு என கூறியுள்ளார். உலகநாயகன் கமலஹாசன் அவ்வை சண்முகி தசாவதாரம் ஆகிய திரைப்படங்களில் மைக்கேல் வெஸ்ட் மோர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Leave a Comment