முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய மாமன்னன்.. எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று மாமன்னன் திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியலை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் மாமன்னன். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனை அடுத்து இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு சொல்லும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்ததை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் பகத் பாஸில், வடிவேலு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

எனவே இதனை பார்க்க மக்கள் குவிந்த நிலையில் தொடர்ந்து நல்லபடியான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு நேற்று வெளியான இந்த படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் அதாவது மாமன்னன் திரைப்படம் நேற்று மட்டும் ரூபாய் 5.50 கோடி முதல் ரூபாய் 6.50 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது இவ்வாறு உதயநிதியின் சினிமா கேரியரில் இதுவே இந்த அளவிற்கு தியேட்டர்களை தெறிக்க விடும் முதல் படமாக அமைந்துள்ளது. மேலும் இதுதான் உதயநிதியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களில் மாமன்னன் படம் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.

அதன்படி அஜித்குமாரின் துணிவு, விஜயின் வாரிசு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2 படங்களை அடுத்து மாமன்னன் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இதனை அடுத்து மாமன்னன் திரைப்படத்தில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வடிவேலுவின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் காமெடி கலாட்டா என அனைவரையும் சிரிக்க வைத்து வந்த வடிவேலு இந்த படத்தில் மிகவும் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அனைவரையும் வியப்பியல் ஆழ்த்தியுள்ளது ஆக மொத்தத்தில் இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கும் நிலையில் மேலும் இந்த படத்தின் வசூல் கூடம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Leave a Comment