எனக்கு இவங்க தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்கும் உதயநிதி.! வேறு வழியில்லாமல் விஜய்சேதுபதி நடிகையை கமிட் செய்த படக்குழு.

தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோவாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் குருவி மற்றும் அதை தொடர்ந்து பல்வேறு விதமான சிறப்பு கூறிய திரைப்படங்களை தயாரித்து திரையுலகில் தான் சிறந்த தயாரிப்பாளர் என்பதை மக்களுக்கு வெளிக்காட்டினார் உதயநிதி. அதன் பிறகு ஹீரோவாக சினிமாவுலகில் என்ட்ரி ஆகி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

அவ்வகையில் இவர் முதலில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு நடிகன் என்பதை சினிமாவிலேயே முதல் படத்திலேயே வெளி காண்பித்தார். இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் நல்லதொரு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன.

இருப்பினும் அதில் பெரும்பாலும் காதல், காமெடி இருந்ததால் ஒரு கட்டத்தில் கிளிக் ஆனாலும் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு தோல்வியை தழுவியது அதை உணர்ந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினும் இனி வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என முயற்சி செய்தார் அந்த வகையில் விவசாயம்வ சம்பந்தப்பட்ட படங்களை கையில் எடுத்தார்.

இந்த திரைப்படங்கள் ஓரளவுக்கு அவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்தாலும் மிகப்பெரிய வசூலை ஈட்ட முடியாமல் இருந்தது அதற்கு மாறாக இன்னும் சற்று வித்தியாசமான படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் கண் தெரியாத நபராக உதயநிதி ஸ்டாலின் பின்னி பெடலெடுத்து இருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது மக்களை கவரும்  திரைப்படங்களை நடிக்க தற்போது ஆர்வம் காட்டுகிறார்.நடிகர் உதயநிதி ஸ்டாலின் அந்தவகையில் ஹிந்தியில் மாபெரும் வெற்றி அடைந்த article 15 என்ற திரைப்படத்தில் தமிழில் தற்போது ரீமேக் செய்ய உள்ளது இதில் அவர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது ஆனால் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி பட நடிகையை வேண்டும் என பிடிவாதம் கொடுத்துள்ளாராம்.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “கருப்பன்” இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை தன்யா இவர் தான் இந்த திரைப்படத்தில் ஜோடியாக வேண்டும் என ஒத்த காலில் நிற்கிறாராம்.

இந்த நிலையில் பட குழு அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார் இந்த திரைப்படத்தை சிறப்பாக எடுக்க இயக்குனர் அருண் காமராஜ் எடுக்க உள்ளார்.

 

Leave a Comment