பிரபல இயக்குனரின் திரைப்படத்தால் சினிமாவுக்கே முழுக்கு போட போகும் உதயநிதி ஸ்டாலின்..!

udhayanithi
udhayanithi

தமிழ் சினிமாவில் சிறந்த தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது திமுக கட்சியில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ளார் என்னதான் கட்சியில் இருந்தாலும் இதுவரை திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் தவிர்த்து தே கிடையாது.

அந்த வகையில் தற்போது நமது நடிகர் அருண் ராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் தன்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த திரைப்படம் பற்றிய அனுபவங்களை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த போது நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நான் பத்து டேக் தான் வாங்கி உள்ளதாகவும் அதுவே மாரி செல்வராஜ் மாமனிதன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது 50க்கும் மேற்பட்ட டேக்குகள் ஆவதால் கால அவகாசம் நீண்டு கொண்டே போகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பன்றிகள், ராஜபாளையம் நாய்கள் போன்ற பல்வேறு விலங்குகள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளதாகவும் இது தனக்கு புதிய ஒரு அனுபவத்தை கொடுத்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகையால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என தெரியவந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்ற யோசனையில் உள்ளாராம். ஏற்கனவே உதயநிதி மாமனிதன் திரைப்படம் தான் என்னுடைய கடைசி திரைப்படம் என்று கூறியிருந்தார் ஆனால் தற்போது இந்த திரைப்படம் தனக்கு கொடுக்க இருக்கும் அமைச்சரவை பதவிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற காரணத்தினால் யோசனையில் உள்ளாராம்.