பீஸ்ட் படம் பத்தி என்கிட்ட கேட்காதீங்க.. வேற மாதிரி பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்.!

இளம் இயக்குனர்கள் அண்மைகாலமாக டாப் நடிகர்களுடன் கைகோர்த்து படங்களை இயக்கிய அசத்துகின்றன அந்த வகையில் நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் மாபெரும் படத்தை கொடுத்ததை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் பீஸ்ட்..

இந்தப் படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு போன்ற பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர் இந்த படம் ஒருவழியாக ஏப்ரல் 13-ம் தேதி கோலாகலமாக வெளியானது இந்த படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் வெளிவந்து எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும்  ஏமாற்றியது. படம்  சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லாமல் போனதால் விஜய்யின் தீவிர ரசிகர்களே படம் சரியில்லை எனக் கூறி நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்தனர் இதனால் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கான வரவேற்பு குறைந்து வருகிறது. மேலும் வசூலிலும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

சொல்லப்போனால் நாளுக்கு நாள் வசூல் ரொம்ப கம்மியா ஆகி கொண்டே போகிறது. இதற்கு ஒரு பக்கம் கே ஜி எஃப் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது ஒரு காரணம். இப்படி ஓடிக்கொண்டிருக்க சினிமா பிரபலங்கள் தொடங்கி பலரும் இப்படம் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அப்படி எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பீஸ்ட் படம் குறித்து கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர் நான் எனது தொகுதி வேலைகளை பார்க்கத்தான் இங்கு வந்தேன் படம் குறித்த விவரங்களுக்கு ரெட்ஜெயன்ட் மூவி தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்கும் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

Leave a Comment