மாதவன் மகனுடன் தன் மகனை ஒப்பிட கடுப்பான உதயநிதி.! என்ன கூறியுள்ளார் பாருங்க..

udhaiyanithi-stalin
udhaiyanithi-stalin

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதவன் படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் மறுபுறம் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்து 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு இன்ப நிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்ற நிலையில் அந்த தொகுதியில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் இதனை தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சராக பதவி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முழு நேர அரசியல் செலுத்தி வருவதால் மாமன்னன் படத்தோடு சினிமாவிலிருந்து விலகிக்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மகன் இன்பநிதி அவருடைய தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் சமீப பேட்டியில் உதயநிதியிடம் இது பற்றி கேட்ட தற்பொழுது அவருக்கு 19 வயதாகிவிட்டது இப்பொழுது ஒரு அடல்ட் இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் தலையிட நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இதனை அடுத்து விளையாட்டு வீரரான மாதவன் மகன் நிறைய மெடல் வாங்குகிறார் என்று சொன்னதும் தயவு செய்து இப்படி கம்பேர் செய்யாதீர்கள் அவருக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார் சென்னைக்கு வந்து எங்களுடன் என் மகன் நேரத்தை செலவழித்தார் 18 வயது பையன் என்ன பண்ண வேண்டுமா அவர் அப்படி இருக்கிறார் அதற்குள் நான் தலையிட விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.