தனது செல்ல மகன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ளவர் உதயநிதி ஸ்டாலின்.தமிழ் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை பட்டி தொட்டியெங்கும் பிரபலபடுத்திக் கொண்டார்.

இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் ஓரளவுக்கு லாபத்தை பெற்று கொடுத்ததால் தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் தற்போது ஆத்மிகா உடன் முதல் முறை இணைந்து ஒரு புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்.

சினிமாவை தாண்டி சமூக வலைதளப் பக்கத்தில் மிகத் துடிப்பாக இருக்கும்  உதயநிதி ஸ்டாலின் அப்பொழுது அரசியல் மற்றும் சினிமா சார்ந்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படம் வீடியோகள் ஓவொன்றும் லைக்குகளை ஆளுகின்றன.

உதயநிதி ஸ்டாலின் 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் இன்பநிதி என்ற ஒரு மகனும் தன்மயா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனது மகன் இன்பநிதி அவர்களுடன் புகைப்படம் எடுத்ததை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார் அந்த புகைப்படம் தற்போது சிலருக்கு மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் ஆள் பார்ப்பதற்கு செம்மையா இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் உயரத்திற்கு இவரும் வளந்து இருக்கிறார் இது நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை…

Leave a Comment

Exit mobile version