எனக்கு பாஸ் உதயநிதி ஸ்டாலின் தான்..! இப்ப இல்ல எப்பவுமே.. புகழ்ந்து பேசிய பிரபல நடிகர்.! அடுத்த படத்துக்கு இப்பவே பிட்டு போடுறாரு..

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தானம். இவர் இதுவரை அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து காமெடியனாக நடித்துள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் போகப் போக இவரது படங்கள் தோல்வியை தான் தழுவி வருகிறது இதிலிருந்து வெளியே வர சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து சந்தானம் நடித்து வருகிறார் அந்த வகையில் மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் குலு குலு என்ற படத்தில் நடித்துள்ளார்.

படம் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தனத்துடன் இணைந்து அதுல்யா, நமீதா, பிரதீப் ராவத், லொள்ளு சபா சேது, லொள்ளு சபா மாறன், ஷைதீனா, ஹரிஷ், கவி விச்சு என பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ராஜநாராயணன் இந்த படத்தை தயாரித்துள்ளார் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவர உள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. சந்தானத்தின் குலு குலு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவி கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தானம் எனக்கு முதலாளி வேறு யாரும் கிடையாது உதயநிதி தான் அவர் சினிமாவில் வசனம் பேசுவதற்கு வரவில்லை.

மக்களிடம் நேரடியாக பேச வந்துள்ளார் என உதயநிதி பற்றி சந்தானம் புகழ்ந்து பேசினார். மேலும் அரசியல்வாதியாக மக்களிடம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் உதயநிதி கூடிய விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் என கூறினார் மேலும் உதயநிதியை பற்றி புகழ்ந்து பேசினார். இதைக் கண்ட ரசிகர்கள் அடுத்த படத்திற்கு இப்பொழுதே அடித்தளம் போடுகிறார் என ஒரு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment