தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியல் குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு அறிமுகமானார். தற்பொழுது இவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் நடிக்க உள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்தவகையில் கிருத்திகா உதயநிதி ஒரு சிறந்த இயக்குனர் ஆவார். கிருத்திகா உதயநிதி இயக்கும் அனைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று விடும்.அந்த வகையில் வணக்கம் சென்னை மற்றும் காலி இரண்டு திரைப்படங்களையும் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார்.
வணக்கம் சென்னை திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் காளி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி வெப் சீரியல் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்க உள்ளாராம். இந்நிலையில் கிருத்திகா உதயநிதி ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் தனுஷ் மற்றும் விக்ரம் இருவர்களின் திரைப்படத்தை எப்படியாவது இயக்கி விட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியை எடுத்த தொகுப்பாளர் ஏன் நீங்கள்தான் ஒரு நல்ல இயக்குனர் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்கலாமே என்று கேட்டதற்கு ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா என்று மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார் கிருத்திகா.