பச்சை சட்டை போட்டாலே நாங்கள் போலந்து கட்டுவோம் என நிரூபித்த இந்திய அணி அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.!

0
cricket u19
cricket u19

ஆசியகோப்பை யூ 19 இந்திய அணி பாகிஸ்தான் அணியை 60 ரன் வித்தியாசத்தில் அடித்து துவம்சம் செய்து அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் யூ 19 ஆசியகோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 60 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இதனால் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, அர்ஜுன் ஆசாத் 121 ரன்களும், திலக் வருமா 110 ரன்கள் எடுத்து இருவரும் சதம் அடித்து இருந்தார்கள், அடுத்ததாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.5 ஓவரில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது அதனால் படுதோல்வி அடைந்தது, இதனால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

இந்திய அணியில் arjun அசாத் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார், இந்திய அணி மூத்த வீரர்களை போல் ஜூனியர் வீரர்களும் பச்சை சட்டையை கண்டாலே அடித்து வெளுத்து விடுகிறார்கள். சந்திராயன் 2 தோல்வி அடைந்ததை கிண்டலடித்த பாகிஸ்தானுக்கு தங்களது அதிரடி ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் பாகிஸ்தானை மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.