கர்ணன் திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்டை வெளியிட்ட மாறி செல்வராஜ்.!!

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி,படிக்காதவன்,பொல்லாதவன்,குட்டி,அசுரன், ஆடுகளம் போன்ற பல படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது தனுஷ் பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் இணையதளத்தின் வழியாக வெளியாக உள்ளது கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ணன் திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் மேலும் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தனிக்கையில் சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் அதனை மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் யு/ஏ சான்றிதழ் வாங்கிய கர்ணன் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment