H. வினோத் வலையில் சிக்கிய இரண்டு டாப் முதலைகள் – ஒன்னு கமல்.. மற்றொரு ஹீரோ யார் தெரியுமா.?

0
vinoth
vinoth

இயக்குனர் ஹச். வினோத் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருகிறார் இவர் இதுவரை எடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே வெற்றி படங்கள் தான். முதலில் ஹச் வினோத் சதுரங்க வேட்டை என்னும் படத்தை படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

அதனை தொடர்ந்து  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களும் சூப்பராக ஓடின.. இப்பொழுது இயக்குனர் ஹச்.. வினோத் நடிகர் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி உள்ளார் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித்தை நெகட்டிவ் கதாபத்திரத்தில் செம மாஸாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் ஆன அமீர், சிபி போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு தோழர்களாக ரிலீஸ் ஆக இருக்கிறது. துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் பட்சத்தில் ஹச். வினோத் சந்தோஷத்துடன் அடுத்ததாக நடிகரும், தயாரிப்பாளருமான கமலஹாசன் உடன் கைகோர்த்து ஒரு புதிய படம் பண்ணவிருக்கிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு..

அடுத்ததாக தனுஷ் படம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறாராம் அவருடனும் ஹச். வினோத் படம் பண்ண இருப்பதாக கூறப்படுகிறது. அவர் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் ரசிகர்களும் இந்த இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடவும் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.