அமலாபால் தயாரிக்கும் படத்தில் இரண்டு தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு – அந்த இரண்டு செல்லங்கள் யார் யார் தெரியுமா.?

amala-pual
amala-pual

மலையாள சினிமாவில் நடித்து பின் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் நடிகை அமலாபால் ஆரம்பத்தில் தமிழில் சர்ச்சையான படங்களில் நடித்து இருந்தாலும் அதை மறைக்கும் விதமாக கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து நடித்ததால் ரசிகர்கள் மனதில் இருந்து அந்த சர்ச்சையான எண்ணங்களை அழித்தார்.

மேலும் மைனா திரைப்படத்தை தொடர்ந்து இவர் தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்துநில், வேலையில்லா பட்டதாரி 2,  ராட்சசன் போன்ற அனைத்து திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற காரணத்தினால் உச்ச நட்சத்திரமாக மாறினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரு சிலருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த திரைப்படத்தில் அமலாபாலின் நடிப்பை பார்த்து விமர்சிக்கத் தொடங்கினார்கள். இந்த படத்தை தொடர்ந்து அமலாபாலுக்கு பெரிதளவு படவாய்ப்புகள் சினிமா உலகில் கிடைக்காமல் போனது.

பட வாய்ப்பை கைபற்ற அமலா பால் ஆடை அளவை குறைத்துக் கொண்டு சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.  ஆனால் எதுவும் மக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பக்கம் எடுபடவில்லை இதனை அடுத்து அமலாபால் வெப்சீரிஸ் பக்கம் களமிறங்கினார் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டி வந்த இவருக்கு ஒருவழியாக தற்போது மலையாளத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் அதோ அந்த பறவை போல என்ற ஆக்க்ஷன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இரண்டு நடிகைகளுக்கு  இழுத்து போட்டு உள்ளார்  அமலா பால்.

மேலும் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறாராம். அந்தத் திரைப்படத்திற்கு காடவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனூப். எஸ்  என்பவர் இயக்குகிறார்.