சினிமா உலகில் ஒரு நடிகர் ஹீரோ என்ற அந்தஸ்தை எட்டவே படாதபாடு படுகின்றனர் ஆனால் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபலங்களின் மகன்கள் எடுத்தவுடனேயே சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.
இது ஈஸியாக இருந்தாலும் அந்த பிரபலங்கள் ஹீரோவான பிறகு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அதை உணர்ந்து கொண்டவர்கள் சினிமாவில் கஷ்டப்பட்டு நடிக்கின்றனர். அந்த வகையில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.
முதலில் கடல் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடர்ந்தார். முதல் படமே சூப்பர்ஹிட் படமாக மாற அதனை தொடர்ந்து ரங்கூன், வை ராஜா வை போன்ற சிறப்பான படங்களை கொடுத்து வந்த இவர் சமீப காலமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து ஆனால் அந்த படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை நழுவவிட்டு உள்ளார். அது என்னென்ன என்பதை இப்பொழுது பார்ப்போம்.
அந்த வகையில் முதலில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கொம்பன் திரைப்படத்தில் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே கௌதம் கார்த்திக்கு தான் ஆனால் இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என சொல்லி விட்டாராம் ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நானும் ரவுடிதான் படத்திலும் படக்குழு முதலில் கௌதம் கார்த்திக் தான் தேர்வு செய்தது இந்த திரைப்படத்தையும் அவர் மிஸ் செய்யவே விஜய் சேதுபதி சிறப்பாக நடித்து அசத்தினார் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.