நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருவதால் இவரது நடிப்பு மற்றும் இவரது படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்றன அதன் காரணமாகவோ என்னவோ மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தனுஷ் பாலிவுட், கோலிவுட் அனைத்திலும் கால் தடம் பதித்து நடித்து வருகிறார்.
இப்படி சினிமா உலகில் தோட்ட எல்லாத்திலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த தனுஷ் தற்போது நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை கண்டு வருகிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார் ஆனால் 18 வருடங்கள் கழித்து தற்போது பிரிந்து உள்ளனர் இச்செய்தி தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நடிகர் தனுஷ் இருபது வயது இருக்கும் பொழுது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரிந்து அதை எடுத்து இரு மகன்களும் சில நாட்களுக்கு அப்பா தனுஷுடனும், சில நாட்களில் அம்மா உடனும் வாழ்ந்து வருகின்றனர். இரு மகன்களின் ஆசை என்னவென்றால் அம்மா, அப்பா இருவரும் இணைந்து மீண்டும் வாழ வேண்டும் என்பதே ஆசை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ் இப்பொழுது அவரது அண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் சூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போது தனது மூத்த மகனை அழைத்து சென்றார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் வைரலானது.
இப்படியிருக்க தன்மையில் இசைஞானி இளையராஜாவின் “ராக் வித் ராஜா” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் தனது இரு மகனுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது தனுஷை அப்படியே அச்சு அசல் இரு பிள்ளைகளும் உரித்து வைத்துள்ளனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..