தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி லியோ திரைப்படத்தின் மூலம் இணைந்ந்து இருக்கிறது இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஏகபோக வரவேற்பை பெற்றது. தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி இருந்தது. தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாரிசுடு என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யும் தெலுங்கில் உருவாகும் வாரிசுடு படத்தை தமிழில் வெளிவருவதற்கு முன்பாகவே வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலையாவின் வீரசிம்ஹா ரெட்டி படம் வெளியானது இதனால் வாரிசுடு படத்தை 12ஆம் தேதி வெளியிடாமல் 14ஆம் தேதி வெளியிட்டார்கள். இப்படி நடிகர் விஜய் சொன்ன தேதியில் வெளியிடாமல் அவர் என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்பது போல தயாரிப்பாளர் செய்த இந்த காரியத்தை பார்த்த விஜய் அவரை திட்டியிருக்கிறாராம்.
இப்படி விஜய்க்கு துரோகம் செய்த தயாரிப்பாளர் உடன் தற்போது இரண்டு முன்னணி நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பட்டாதான் இவர்கள் திருந்துவார்கள் என்று கூறி வருகிறார்கள்.

