சினிமா உலகில் ஒரு படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தால் போதும் அந்த படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் அடிக்கும் அதுபோன்ற படங்களை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் அந்த வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் யாஷ் அவர்களை வைத்து முதலில் இயக்கிய திரைப்படம் தான் கே ஜி எஃப்.
முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உடன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது இந்த படமும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் சீன்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.
இதனால் வசூலில் பட்டையை கிளப்புகிறது அண்மையில் வெளிவந்த அனைத்து படங்களின் சாதனையை முறியடித்துள்ளது கேஜிஎஃப் 2. இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இப்படியே போய்க் கொண்டிருந்தால் நிச்சயம் ஆயிரம் கோடியைத் தொட்டு ஒரு புதிய சாதனையைப் படைக்க இருக்கும் என கூறப்படுகிறது.
கே ஜி எஃப் 2 திரைப்படத்தை தொடர்ந்து அதன் மூன்றாவது பாகமும் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படம் தமிழகத்திலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை பின்தள்ளிவிட்டு முன்னுக்கு ஓடுகிறது கே ஜி எஃப் 2. இந்த திரைப்படத்தை அண்மையில் தமிழ் சினிமா பிரபலங்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்பொழுது இசைஞானி இளையராஜா மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியவர்கள் திரையரங்கில் இந்த படத்தை பார்த்து கண்டுகளித்துள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
