அனல் பறக்க வெளிவந்த “ஜெயிலர்” படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!

Jailer Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம். படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என பல திரைப்படங்கள் நடித்துள்ளனர்.

படத்திலிருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டுமே மிரட்டலாக இருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கான காணப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் விற்று தீர்ந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று படம் வெளியாகி  ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் ஷோ ஆனால் பெங்களூருவில் இன்று அதிகாலை 6:00 மணிக்கே முதல் ஷோ.. அதேபோல சிங்கப்பூர் போன்ற முக்கிய இடங்களில் ஜெயிலர் படத்தின் FDFS தொடங்கிவிட்டது.

இதனால் படத்தை ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் ஜெயிலர்  படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என ரசிகர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட்களாக கொடுத்து வருகின்றனர்.

அதன்படி சில ரசிகர்கள் சொல்லி உள்ளது.. முதல் பாதி வேற லெவல் நெல்சன்னுக்கு இது மிகப்பெரிய ஒரு கம் பேக். மேலும் அணி உனக்கு மட்டும் எங்கிருந்திய இவ்வளவு வெறி வருது என ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்..

மற்றொருவர் முதல் பாதி திருப்தியாக இருக்கிறது யோகி பாபு – தலைவர் காம்போ சூப்பர்.. தலைவர் ஆக்சன்னில் பின்னி இருக்காரு இண்டர்வல் பல டிவிஸ்ட் இருக்கு என கூறியுள்ளார்..

படத்தில் எந்த ஒரு டிசப்பாய்ண்ட்மென்ட்டும் இல்லை படம் வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment