தற்போது தமிழகம் மிகுந்த பரபரப்பில் இருக்கிறது. தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளுக்கு இடையே பகிரங்க போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் விஜய் சில மாதங்களுக்கு முன்பே மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இடையில் சில சம்பாவிதங்கள் நிகழ்ந்த நிலையில் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாகிவிட்டார்.
அதில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலைகள் தீயாக நடைபெற்று வருகிறது. அதே போல் கட்சியின் சின்னம் முடிவு செய்யும் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
அதில் விஜய் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை கேரளாவில் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது. அதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு மோதிரம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. விரைவில் தலைவர் விஜய் இதை அறிவிப்பார் என தெரிகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய் விரைவில் ஈரோடு சென்று அங்கு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.